Wednesday, July 26, 2006

சட்டை

அமைதியாயிருக்கிறது.
தனியாய் நான். தனிமையிலன்றி.
சூரியனிடம் கடன் வாங்கி ஒளி தரும் நிலவு போல்
பிறர்க்கான எனதியல்புகளும்,
பாம்பு உரித்துப் போட்ட சட்டை ஒத்ததாய்
எனக்குரிய பாசாங்குகளும்
எல்லாமே அகன்று
என்னுடன் நான் மட்டுமே
அழகானதொரு அமைதி தேற்றும்.

அதுவே இயல்பென்று (என்னைச்)
செலுத்த முற்படுகையில்,
பொறுக்காத வாழ்க்கையின் நாராசம்
பட்டுக் கிழிகிற அமைதி
கழற்றிப் போட்ட பாசாங்குச் சட்டையை
என் மீது வீசிப் போகும்.

Labels: