Monday, October 23, 2006

பகல் நடை

முகம் தொலைத்த
மனிதரிடையே நடக்கிறேன்
பகற்பொழுதின் குறுநிழல்கள்
நீண்டு தொட எத்தனிக்கும்.

நீரளைகிற சிறு குழந்தைக்கும்
உடலிளைக்க நடப்பவருக்கும்
தன் செயலே கண்.
கடந்து போகிற வாகனங்கள்
கண்ணுக்குத் தெரியாமல்
மாசுகளைத் தெளிக்கிற இந்த
நேரம் மறந்த பகற்பொழுதில்
வெயில் நிழல் காற்று இலை இவற்றுடன்
நானும்,
என்னுலகை நிரப்பிக் கொண்டு
கனவு கலையும் வரை நடந்திருப்போம்.

Labels:

0 உங்கள் கருத்து:

Post a Comment

<< Home