Monday, July 24, 2006

???

உனக்கும் இல்லாமல் எனக்கும் இல்லாமல்
தொலைந்து போகின்றன பொழுதுகள்

வரைந்திருந்த வட்டத்துக்கு வாசல் வைத்தேன்
அகண்ட அகழிகள் காணாமற் போன பிறகு
அதிலிருந்த முதலைகளாய் ஞாபகங்கள் கொல்லும்

அரணிழந்து நிற்கின்றேன், தழும்புகள் நினைவுக் குறிப்பாய்.
அகழியைத் திரும்பத் தோண்டிக் கொண்டு
புரியாமல் குடிவர எத்தனிக்கும் அன்னங்களை விரட்டி
வாய்பிளக்கும் முதலைகளைக் குடியேற்ற
ஆவியாய்ச் சூடாகி மேலெழும் என்னுணர்வு

Labels:

2 உங்கள் கருத்து:

Blogger கார்திக்வேலு சொல்வது..

முகில்
சொல்லிய விதம் கவித்துவமாக இருக்கிறது
வடிவத்திலும் , வார்த்தை அமைப்பிலும்
சில மாற்றங்கள் செய்தால் இன்னும்
மெருகேறும்.

24 July, 2006 11:42  
Blogger முகில் சொல்வது..

மிகச் சிலவற்றையே திருத்தி எழுதுவது. மற்றும்படிக்கு அந்தக் கணத்திலே தோன்றுவதை அப்படியே எழுதுவதுதான். எழுதும் போது அனுபவிக்கிற தாக்கம் திருத்தும் போது பலநேரங்களில் குறைந்து விடும்(சில சந்தர்ப்பங்கள் தவிர). அதனாலேயே மிகவும் பாதித்து எழுதினால் திருத்த விரும்புவதில்லை.

இனிமேல் வடிவத்தைக் கவனத்தில் கொள்கின்றேன். ஊக்கத்துக்கு நன்றி கார்த்திக்வேலு.

24 July, 2006 15:34  

Post a Comment

<< Home