Tuesday, June 27, 2006

வேண்டல்

வளர்ந்தும் தேய்ந்தும்,
திரும்ப வளர்ந்தும்
சிறுபிள்ளைகளாயிருந்து பெரியவராகி - பின்
கிழடு தட்டியதும் மீண்டும் சிறுபிள்ளையாவது போல்
நாள் தோறும் நீட்சியும் குறுக்கலும்.

மீள்தன்மை எங்கிருந்து வருகிறதோ
காலம் தந்த தோலில்.

தேய்ந்தால் வளராமல்
வளர்ந்தால் தேயாமல்
இவைதான் இல்லாவிட்டாலும்,
இழுபட்டதின் அடையாளமாய்
கோடுகளாவது கோலம் போட்டு நிற்கக் கேட்கும் நிழல்.

Labels:

1 உங்கள் கருத்து:

Anonymous Anonymous சொல்வது..

1st para is good.

28 June, 2006 23:03  

Post a Comment

<< Home