Friday, May 26, 2006

சூரியன்


மழையின் களியாட்டப் பொழுதொன்றில்
நிழல்களெல்லாம் வாலைச் சுருட்டிக் கொண்டு
ஒளிந்திருக்கும் அழகிய நேரத்தில்
என்னைத் தொலைப்பேன்.
ஓய்ந்து சிறிது நேரத்தில்
மரங்களின் கண்ணீருடன் விடைபெறும் மழையின்
கடமையுணர்த்தும் அழைப்புக் கேட்டு
மீண்டு வருவேன்
தொலைந்து போகும் இன்னொரு தருணம்
மீண்டும் வருமென்று.

Labels:

4 உங்கள் கருத்து:

Blogger ரவி சொல்வது..

கவிதை அருமை...

26 May, 2006 17:02  
Blogger மணியன் சொல்வது..

எளிமையான தமிழில் அழகான கவிதைகள். தமிழ்மணத்தில் உங்கள் மணம் வீச தாருங்கள். வாழ்த்துக்கள்!

26 May, 2006 18:04  
Blogger முகில் சொல்வது..

வரவுக்கும் ஊக்கத்துக்கும் நன்றி மணியன், ரவி.(செந்தழல் அடைமொழி என்னத்தைக் குறித்து?)

26 May, 2006 21:21  
Blogger கார்திக்வேலு சொல்வது..

முகில் ,
சிறப்பாக வந்திருக்கிறது கவிதை .

29 May, 2006 22:18  

Post a Comment

<< Home