Tuesday, September 19, 2006

உனக்கான என் அறிமுகம்

நீளுகின்ற இரவுகளின் கருமை
மனதில் படிந்திருக்கும்.
இன்னுமின்னும் எடுத்தெடுத்து
அகமுகத்தில் பூசி அழகு தொலைக்கிறேன்
வழமையான வட்டத்தில்
வழமையான வாழ்க்கை - அலுத்துக் கொள்ளும் நான்

புதிதான மாற்றம் எல்லோருக்கும் வருவதுதான்
ஆனாலும் எல்லோருக்கும் நெடுங்காலம் பழகியதாய்.
முன்னான என் வாழ்க்கை மனக் கண்ணில்
தேரோட்ட, அதிலமர்ந்து வரும் என்
நெடுமூச்சு.

உதறின பாயிலிருந்து பறக்கிற
தூசித்துகள் போல நினைவுகள்
ருசிக்கப்படும் என்னைச் சுற்றி நடனமாடும்.
அடுத்த விடியலில் என்னை நானே ரசிக்க
மீதி ஏதாவதிருப்பின்
அன்றையப்பொழுதில் மனத்தோட்டத்தில்
"மாற்றான்" மல்லிகையாவான்..
(மாற்றான் மல்லிகையாக்கப்படுவான் எனில்
மல்லிகையாய் இருந்து மாற்றான் ஆக்கப்பட்டவனுக்கு
என் மனதிலேனும் மணம் திரும்பலாகாதா?)

என் நெடுமூச்சுக்கள் இன்னுமின்னும்
நெடுநெடுக்க, காரணமறியாத கூரலகுகள்
ஏதேதோ சொல்லிக் குத்தும்.
பூசிக்கொள்கிற கருமையின் அளவு
அதிகதிகமாய்.. இன்னும் வேண்டுமென்று.

என் விருப்பில் நான் ரசிக்கும் உன் ஸ்பரிசம்
இதுவரை பூசின கருமையை இன்றே துடைக்காதெனினும்
என்றோ ஒரு நாள் தொலையுமென்று
இப்போதைக்கு பழையவை ஒருபுறமொதுக்கி
உன் சின்னப் பூக் கையுடன் எனதைக் கோர்க்கிறேன்..
என் மகளே, நான் உன் அம்மா.

Labels:

2 உங்கள் கருத்து:

Blogger கார்திக்வேலு சொல்வது..

முகில்,

//என் நெடுமூச்சுக்கள் இன்னுமின்னும்
நெடுநெடுக்க, காரணமறியாத கூரலகுகள்
ஏதேதோ சொல்லிக் குத்தும்.//

//தூசித்துகள் போல நினைவுகள்
ருசிக்கப்படும் என்னைச் சுற்றி நடனமாடும்.//


கவிதைக்கு முக்கியமான உணர்ச்சி
ஓட்டம் நன்றாக வருகிறது
இன்னும் சிறப்பாக வரும்.


[பல தேவையற்ற/redundant வார்த்தைகளை நீக்கினால் கவிதை இன்னும்
பலப்படும்]

19 September, 2006 17:29  
Blogger முகில் சொல்வது..

நன்றி கார்த்திக்வேலு

20 September, 2006 15:13  

Post a Comment

<< Home