Wednesday, May 24, 2006

போனவன்

இயலாமையில் அள்ளியெறிந்த மணல்,
தன் அடையாளமாய்க் கையில்
விட்டுப்போன தூசியைத் தட்டிக் கொணடு்
நானும் என் எண்ணங்களும்
அன்பின்றி விட்டுப் போனவனை நினைத்திருக்கையில்
இலைகளினூடே நிலத்துடன்
கண்ணாமூச்சியாடும் வெளிச்சம் போல் தொட்டுச் செல்கிறது
நெடுமூச்சுகளால் நிரம்பியிருக்கிற வெக்கையான இரவில்
ஆற்ற முயலும் காற்றின் வீச்சு.

சிதறிக் கிடக்கும் கனவுக்கோட்டையின்
சாளரக் கண்ணாடித் துண்டுகளில் - நேசிப்பு
நிராகரிக்கப்பட்டதன் வலி பட்டுத் தெறிக்கச்
சிரிக்கின்றேன் - நீ ஒருபோதும் அழக்கூடாதென்று
என்னன்பு ஒருமுறை சொல்லிப் போனதினால்.

Labels: