Tuesday, May 23, 2006

தேவையில்லை

விடியுமாவெனத் தெரியாமலே
இரவில் விசும்பல்கள் தாலாட்ட - உறங்கச்
செல்லுங் கலை கற்றுவிட்டோம்.
செவிகளிற் பேரிரைச்சலாய்க் குடையுமிந்தஒப்பாரி ஓலங்கள்
பள்ளியெழுச்சியாய்! யாருக்காய் விடிகின்றன இந்தப் பொழுதுகள்?
உனக்கா எனக்கா?
கழியப் போகிற நாட்பொழுதின் உள்ளடக்கம்
சிதறும் சதையும் ஓடுஞ் செங்குருதியும்
பெருக்கெடுக்கும் பெற்றவள் கண்ணீரும்
என்றிருக்கும் வரைநாட்காட்டிகள் எமக்கெதற்கு!

நன்றி:-:-: நாட்காட்டி கேட்ட சிறுவனுக்கும், புதிய நாள் பார்த்து என்ன மாறப் போகுதென்று கேட்ட அவன் அப்பாவுக்கும்.

Labels: