Thursday, July 20, 2006

ஆசை

இருட்டில் துழாவும் என் கைகள் போல
தனக்கான இருட்டில் பசி தணியவேண்டி
இரை கிடைக்கும் வரை கால்கள் நீளும்.
வெளிச்சத்திலிருக்கும் கைகளுக்கோ வேறு பகுதிகளுக்கோ
எதிர்பார்க்கும் குளிர்மையின்றி வெம்மை மட்டும்
காற்றின் வறண்ட பரிசாய்.

அன்றொரு காலம் தேவை நிறைவேற்றிப் போன உருவம்
மங்கலாய்த் தெரிந்தாலும்
இன்றைக்கு அவள் எங்கேயென்று ஆராய முன்னம்
இற்றைத் தேவை உறுத்துகிறது.
எட்டிய மட்டும் ஒன்றுமில்லை
தன்னைப்போலவே யாராரோ இருந்து போனதின்
அடையாள எச்சங்கள் மட்டும்
காய்ந்த சருகாய் ஆனவைகளின் அழைப்புகள் மீறி
வாழும் ஆசையின் முடிவு காண வெறி வரும்

கொண்ட மயக்கம் தெளிந்து விழிக்கு முன்னே
வெம்மை மறந்த காற்றில்
கலந்து வந்த எழிலொன்று
சிலிர்ப்பாய்த் தேகம் தொட்ட கணம்
நாளை என்பது உண்டென்று

மழையையேந்தும் மரம்.

Labels: